×

புதுகையில் எய்ட்ஸ் தடுப்பு பணிக்கு தற்காலிக ஆட்சேர்ப்பு

புதுக்கோட்டை, செப்.15: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தடுப்பு பணிகளை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமானது மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு மூலம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் தற்காலிக பணியிடங்களான திட்ட மேலாளர், ஆற்றுப்படுத்துநர், கண்காணிப்பு, மதிப்பீட்டாளர், நிதியாளர் மற்றும் களப்பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் திட்ட மேலாளர் பணிக்கு சமூக அறிவியலில் முதுநிலை பட்டம் மற்றும் 2 முதல் 3 ஆண்டு எச்.ஐ.வி எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் அனுபவமும், ஆற்றுப்படுத்துநர் பணிக்கு சமூக சேவையில் முதுநிலை, சமூகவியலில் முதுநிலை, உளவியலில் முதுநிலை பட்டம் மற்றும் 2 ஆண்டு எச்.ஐ.வி எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் அனுபவமும், கண்காணிப்பு, மதிப்பீட்டாளர் மற்றும் நிதியாளர் பணிக்கு கணிணி பயிற்சியுடன் கூடிய இளங்கலை வர்த்தகமும் மற்றும் களப்பணியாளர் பணிக்கு 12ம் வகுப்பு, இலக்கு மக்களுக்கு 8ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 23ம் தேதி கடைசியாகும்.

Tags : bush ,
× RELATED பராமரிக்க மறந்த அதிகாரிகள் புதர் மண்டி கிடக்கும் கால்வாய்கள்