×

விராலிமலை தொகுதியில் திமுக இளைஞரணி சேர்க்கை முகாம்

விராலிமலை, செப்.15: தொகுதியில் திமுக இளைஞர் அணி சேர்க்கை முகாம் நடைபெற்றது. விராலிமலை செக்போஸ்ட் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் மணி, அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தென்னலூர் பழனியப்பன். விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன், விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் இளஞ்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர்அணி துணை செயலாளர் பாலசந்தர் வரவேற்றார்.

திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி முகாமை துவக்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ராஜாங்கம், மாவட்ட பொறியாளர் அணி செந்தில்குமார், இளைஞரணி நிர்வாகிகள் சிவக்குமார், சிவா, அன்சாரிபாசித். சண்முகசுந்தரம், அன்பழகன் உட்பட திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,youth enrollment camp ,constituency ,
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...