×

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் சத்தான உணவு திருவிழா

காரைக்கால், செப்.15: காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், சத்தான உணவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில், புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சத்தான உணவித் திருவிழாவிற்கு, சப்-கலெக்டர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பாலாஜி, துறை துணை இயக்குனர் சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கல்லூரி பி.எஸ்.சி மாணவிகள் தயார் செய்து காட்சிக்கு வைத்திருந்த சத்தான உணவு வகைகளை சப்-கலெக்டர் பாஸ்கரன் பார்வையிட்டு பாராட்டினார்.

பின்னர், சத்தான உணவு வகைகளில் சிறந்த உணவை தயாரித்த 3 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சத்தான உணவு தயாரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Tags : Nutritious Food Festival ,Karaikal ,Government Women's College ,
× RELATED காரைக்காலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி