×

அண்ணா பிறந்த நாள் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

கரூர்,செப்.15: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன.கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற போட்டியை கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 75 பேர், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 120 பேர், 17 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 60 பேரும் கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வினித்குமார், ஜெய்ஆதித்யா, அஜய்குமார், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வித்யா, பவியா, கயல்விழி, ஆண்கள் பிரிவில் சஞ்சய்குமார், விஸ்வா, ராகுல்ராஜ் ஆகியோரும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நதியா, ரமணி, ப்ரநிதா, ஹரிபாலா சபரிராஜ், நவீன்குமார், சூர்யா ஆகியோரும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.

Tags : Anna ,birthday party ,bicycle competition ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்...