பள்ளிபாளையம் நகரில் திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கை

பள்ளிபாளையம், செப்.15: பள்ளிபாளையம் நகர திமுக இளைஞரணியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், 9வது வார்டு டிவிஎஸ் மேட்டில் நடைபெற்றது. நகர திமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். நகர இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் குமார், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் வக்கீல் ரமேஷ், சிறுபான்மையோர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அன்பு, மாவட்ட பிரதிநிதி மாதேஸ்வரன், மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், நகர அவைத்தலைவர் குளோப்ஜான், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், சதீஷ், நந்தபிரகாஷ், திருநாவுக்கரசு, ரவீந்திரன், நகர துணைச்செயலாளர் சண்முகம், வார்டு செயலாளர் செல்வராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் செல்வம், திமுக நிர்வாகிகள் ஜெயகோபி, ஜிம்செல்வம், மனோகரன், நூல்செல்வம், குருசசி, இளைஞரணி ஜகாங்கீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: