கூட்டப்பள்ளி ஏரியை தூர்வார ஒரு மாத சம்பளம் வழங்கிய எம்எல்ஏ

பள்ளிபாளையம், செப்.15: திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரியை தூர்வார, தனது ஒரு மாத சம்பளத்தொகையை எம்எல்ஏ சரஸ்வதி நன்கொடையாக வழங்கினார். பள்ளிபாளையம் ஆவாரங்காடு நகராட்சி திருமண மண்டபத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பங்கேற்ற திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, கூட்டப்பள்ளி காலனி ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள துளிர் நலச்சங்கத்திற்கு, தனது ஒரு மாத சம்பளத்தை  நன்கொடையாக அளித்தார்.

 இந்த தொகை, அமைச்சர் தங்கமணி மூலம், துளிர் அமைப்பினரிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஆசியாமரியம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், பள்ளிபாளையம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் நகரமன்ற தலைவர் வெள்ளியங்கிரி, தாசில்தார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,lake ,
× RELATED வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து...