×

தேன்கனிக்கோட்டையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

தேன்கனிக்கோட்டை, செப்.15:  தேன்கனிக்கோட்டையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தளி பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் தளி, ஓசூர், வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, ஓசூர் நகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முகாமில் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசலுரெட்டி, திவாகர், கணேசன், பேரூர் செயலாளர் சீனிவாசன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணன், அசோக்குமார், வேணு, பேரூர் அமைப்பாளர்கள் முஜாமல்பாஷா, தஸ்தகீர், துணை அமைப்பாளர்கள் சுரேஷ், சூர்யகாந்த், சித்திக், ஒன்றிய அமைப்பாளர்கள் பிரபாகர், ராஜா, தேவராஜ், சம்பத்,பெரியண்ணன், முனிராஜ், ரவி, ஹரிஸ், மாதேஸ், மூர்த்தி, பைரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓசூர்:  ஓசூரில் ரயில் நிலையம் முன்பு, திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தளி பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

முகாமில் நகர இளைஞரணி அமைப்பாளர் சுமன் வரவேற்றார். வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், ஓசூர் எம்எல்ஏ சத்யா, மாவட்ட அவை தலைவர் யுவராஜ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், நகரில் உள்ள 45 வார்டுகளிலும் ஏராளமான இளைஞர்கள் திமுக இளைஞரணியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஓசூர் தொகுதி இளைஞரணி முகாம் பொருப்பாளர்கள் சீனிவாசன், ராமு, முருகேஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரமணி, மாவட்ட கவுன்சில் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மத்திகிரி ரவிகுமார், தொண்டரணி சேகர், மாவட்ட துணை அமைப்பாளர் சக்திவேல், வடிவேல், நகர நிர்வாகிகள் கருணாநிதி, சென்னீரப்பா, திம்மராஜ், நாகராஜ், ரத்தன்சிங் ஆனந்தய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சூளகிரி: இதேபோல், சூளகிரியில், எம்எல்ஏக்கள் முருகன், சத்யா ஆகியோர் கலந்து கொண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கினர். இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டார். இதில், மாவட்ட நிர்வாகிகள் யுவராஜ், சீனிவாசன், பாக்கியராஜ், ஷேக் ரஷீத், சாலம்மாள், ரகுநாத், கிருஷ்ணமுர்த்தி, இளைஞரணி நிர்வாகிகள் முனிசந்திரன், குமார், சுரேஷ், ஜியா உல்லா, விஜயக்குமார், சீனி, சிவக்குமார், கோவிந்தன், ராமச்சந்திரன், வெங்கடேஷ், ரவிக்குமார், நரசிம்மன், பாலசந்திரன், ராஜேந்திரன், அன்புசேகரன், ஆனந்த் மற்றும் நிர்வாகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி