×

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ பேரணி

கிருஷ்ணகிரி, செப்.15: கிருஷ்ணகிரியில் புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள 17பி ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் துவங்கிய இந்த பேரணியை, மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். பேரணியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, நிதி காப்பாளர் நாராயணன் ஆகியோர் தலைமையேற்று வழிநடத்தினர்.

இந்த பேரணி டி.பி.லிங்க் ரோடு வழியாக பழையபேட்டை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் தியோடர் ராபின்சன் மற்றும் நடராஜன் மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். நந்தகுமார் நன்றி கூறினார். ஓசூர்: ஓசூர் ராம் நகரில் ஆசிரியர் கூட்டமைப்பு  ஒருங்கிணைப்பாளர் பொன் நாகேஷ் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர் சங்க  முன்னாள் நிர்வாகி சந்திரசேகர், மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் தேவராஜ், மாவட்ட  நிர்வாகிகள் ஜெயலட்சுமி, ஜெகதாம்பிகா, ஆறுமுகம், வட்ட செயலாளர் திம்மராஜ், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன  உரையாற்றினர்.

Tags : rally ,Krishnagiri ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி