×

கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்க்கை

கிருஷ்ணகிரி, செப்.15: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில், திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நடந்த முகாமிற்கு நகர திமுக செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். ஒன்றிய, நகர, இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். முகாமினை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினிசெல்வம், துணை அமைப்பாளர்கள் அமீன், செந்தில்குமார், சுந்தர்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் அஸ்லாம், கராமத், டேம் பிரகாஷ், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, திருமலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பர்கூர் சட்டமன்ற தொகுதி கந்திகுப்பத்தில், ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், ஊத்தங்கரையில் பேரூர் செயலாளர் பாபுசிவக்குமார் ஆகியோர் தலைமையில் இந்த முகாம் நடந்தது.

Tags : DMK ,Eastern District ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...