×

ஐஎன்டியூசி மின்சார தொழிலாளர் கூட்டம்

ஓசூர், செப்.15: ஓசூரில் அகில இந்திய ஐஎன்டியூசி மின்சார தொழிலாளர்கள் திட்ட செயலாளர்கள் கூட்டம் டாக்டர் மனோகரன் தலைமையில் நடந்தது. வகித்தார். பொது செயலாளர் சொர்ணராஜ் முன்னிலை வகித்தார்.  மாவட்ட ஐஎன்டியூசி துணை தலைவர் முனிராஜ், வீரமுனிராஜ், துணை பொது செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் பரமானந்த பிரசாத், செல்வம், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க முத்தப்பா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சங்கத்தின் செயல் தலைவராக மீண்டும் டாக்டர் மனோகரன், பொது செயலாளராக சொர்ணராஜ், பொருளாளராக அனுசுயா, இணை செயலாளர்களாக களியபெருமாள், ஆறுமுகம் ஆகியோரை நிர்வாகிகள் தேர்வு செய்தனர். அக்டோபர் 17,18,19 தேதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் அகில இந்திய ஐஎன்டியூசி கூட்டத்தில் செயல் தலைவர் மனோகரன் கலந்து கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : INTUC Electricity Workers ,Meeting ,
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...