×

திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

தர்மபுரி, செப்.15: தர்மபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே ஒன்றிய திமுக சார்பில் இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ., கலந்துகெண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தர்மபுரி ஒன்றிய திமுக செயலாளர் கேஎஸ்ஆர் சேட்டு, திமுக நிர்வாகிகள் வக்கீல் மணி, காவேரி, சிட்டி முருகேசன், டி.லட்சுமணன், ஆறுமுகம், இளைஞரணி ரமேஷ், பி.லட்சுமணன், இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லத்துரை, நிர்வாகிகள் பெரியசாமி, கோவிந்தராஜ், பார்த்திபன், விஜய், தண்டபாணி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

இதுபோல் தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே பண்டஅள்ளி கிராமத்தில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக இளைஞரணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் முகாமை தொடங்கி வைத்தார். இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ராஜகோபால், திமுக நிர்வாகிகள் சித்தன், கண்ணன், பாண்டுரங்கன், வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம்:  மொரப்பூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே, திமுக இளைஞரணி புதிய உறுப்பினர்  சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ்குமார் தலைமை  வகித்தார். இதில், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றிய  செயலாளர் குமரவேல், எம்விடி கோபால், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்  முருகன், மாவட்ட விவசாய அணி ரவி, நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்  கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி தங்கதுரை, ஹரிபிரசாத், கோபிநாத், வர்த்தக அணி  சேட்டு, நகர இளைஞர் அணி அருள், சுரேஷ், வசந்த், வேலன், சேகர், சீனிவாசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : New Membership Admission Camp ,DMK Youth ,
× RELATED 300 குடும்பங்களுக்கு திமுக சார்பில் உதவி