×

திண்டிவனத்தில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

திண்டிவனம், செப். 15: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை 5வது தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள்  திண்டிவனம் நேரு வீதியில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெருமாள் கோயில் அருகே சுப்ரமணியன் கோயில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் யுவராஜ்(26) என்பவர் வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உன் குடும்பத்தையே அழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிந்து யுவராஜை கைது செய்தார்.

Tags : Tindivanam ,
× RELATED கொடைக்கானல் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு