×

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கியது

சிவகங்கை, செப். 15: திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று துவங்கி நவ.14வரை நடக்க உள்ளது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திமுக மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்து பேசினார். இதில் ஏராளமான இளைஞர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, நகர் செயலாளர் துரைஆனந்த், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், முத்துராமலிங்கம், காளையார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் கென்னடி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேதுபதிராஜா, துஷாந்த்பிரதீப்குமார், பொற்கோ, நகர இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் காரைக்குடியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகிக்க, முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK Youth Membership Admission Camp ,
× RELATED திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கியது