×

பலியானவர்கள் குடும்பங்களுக்கு மணிகண்டன் எம்எல்.ஏ. நிதியுதவி

பரமக்குடி, செப். 15: ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட கல்கிணறுவலசை கிராமத்தை சேர்ந்த மாணவன் மின்சார தாக்கி இறந்ததிற்கும், கடலில் சூறாவளி காற்றுக்கு மரணமடைந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கும் தனது சொந்த பணம் 3 லட்சத்தை மணிகண்டன் எம்எல்ஏ நிதியாக வழங்கினார். அரசின் நிதி பெறுவதற்கு முதல்வரிடம் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். மண்டம் ஒன்றியம் கல்கிணற்றுவலைச கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கார்த்தீஸ்வரன். அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் பள்ளியில் மின்சார மோட்டாரை ஆன் செய்வதற்காக பட்டனை அழுத்தியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மாணவனின் குடும்பத்திற்கு ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மணிகண்டன் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.1 லட்சம் வழங்கினார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த மாதம் 28ம் தேதி கடலூரில் வாங்கிய பைபர் படகு மூலம் ராமேஸ்வரம் வந்தனர். அப்போது சூறாவளி காற்றில் சிக்கி மதன்குமார் (30), காந்தகுமார் (22), உமாகாந்த (19), இலங்கேஸ்வரன் (19) ஆகியோர் பலியாகினர். இவர்களின் குடும்பத்திற்கு தனது சொந்த பணத்திலிருந்து தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார். இதுகுறித்து எம்எல்.ஏ., மணிகண்டன் கூறுகையில், ‘பள்ளி மாணவனின் இறப்பும், ராமேஸ்வரம் மீனர்களின் இறப்பு அவர்களின் குடும்பத்திற்கு பெரிய இழப்பாகும். இவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிதி கொடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். என்னால் முடிந்த உதவியை தற்காலிகமாக செய்துள்ளேன்’ என்றார்.

Tags : victims ,Manikandan MLA ,families ,
× RELATED ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும்,...