×

ஐவர் நினைவு தினம் அனுசரிப்பு

சாயல்குடி, செப். 15: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் 1957ம் ஆண்டு  தவசியாண்டி, ஜெகநாதன், சிவமணி, சித்திரவேல், முத்துமணி ஆகியோர் போலீசாரால் சுடப்பட்டு இறந்தனர். இவர்களது நினைவு தினம், அக்கிராம மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது, நேற்று நடந்த 62ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கீழத்தூவல் தேவ ர்சிலையிலிருந்து மவுன ஊர்வலமாக சென்று அவர்களது நினைவு தூணில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நினைவிடத்தில் கிராம பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அரசு மணிமண்டபம் கட்டித் தரவேண்டும், அஞ்சலி செலுத்த வரும் அரசியல் கட்சியினர், பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நினைவுதினத்தையொட்டி இரண்டு டிஎஸ்பிகள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Memorial Day ,
× RELATED மதிமுக சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்