×

உடுமலையில் பேனர்கள் அகற்றம்

உடுமலை, செப்.15: சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு விழுந்து பொறியாளர் சுபஸ்ரீ பலியானதை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. முறைகேடாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களும், தங்களுக்கு பேனர் வைக்க கூடாது என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர்.மாநிலம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி, உடுமலை நகரில் தளி ரோடு நூலகம் அருகே, ரயில் நிலையம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நகராட்சி சுகாதார துறையினர் நேற்று அகற்றி லாரியில் கொண்டு சென்றனர். இதேபோல், மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், தேவனூர்புதூர் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களையும் அதிகாரிகள் அகற்றினர்.

Tags : Removal ,Udumalai ,
× RELATED உடுமலையை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை