×

குடிமராமத்து பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

திருப்பூர்,செப்.14:  பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.30.20லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப்பணிகளை நேற்று கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி விவசாய மக்கள் பயன்பெறும் வகையில் 134 பணிகள் ரூ.15 கோடியில் செயல்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விவசாய சங்கங்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

குடிமராமத்துப் பணிகள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், காங்கயம், திருப்பூர் தெற்கு வட்டங்களில் 1,33,663 ஹெக்டர் பாசன நிலங்கள் பயன்பெறும். மேலும், பல்லடம் வட்டத்திற்குட்பட்ட 63-வேலம்பாளையம், பூமலூர் பாசன நீரினை பயன்படுத்தும் விவசாய சங்கத்தின் சார்பில் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டிலும், பல்லடம் மங்கலம் சாலை, பல்லடம் விரிவாக்க கால்வாய், நாரணாபுரம் 2 கிராம நீரினை பயன்படுத்தும் விவசாய சங்கத்தின் சார்பில் ரூ.10லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் மாரப்பகவுண்டம்பாளையம், வாவிபாளையம் கிராம நீரினை பயன்படுத்தும் சங்கத்தின் சார்பில் ரூ.12.80 லட்சம் மதிப்பீட்டிலும் என ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, ஆழியார் வடிநிலக்கோட்டம், பல்லடம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி பொறியாளர் சிங்காரவேலு, பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...