×

அண்ணமார் கோயில் பொங்கல் விழா

அவிநாசி,செப்.15:  பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி முட்டியங்கிணறு கிராமத்தில் உள்ள அண்ணமார் கோயிலில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  கடந்த 29ம் தேதி முனியப்பன் தீர்த்தம் எடுத்தல், 30ம் தேதி சாமி சாட்டுதல், 3ம் தேதி பட்டத்தரசியம்மன் பொங்கல் விழாவை தொடர்ந்து கொம்பன் கட்டுதல், மினி கண் திறப்பு, படைக்கல பூஜை ஆகியன நடந்தது. நேற்று முன்தினம் அம்மை அழைத்தல், கருப்பராயன் கரும்பு பூஜை, மதுரைவீரன் தீப்பந்தம் கட்டுதல், கிளி பிடித்தல், கொப்பன் குத்துதல், உச்சிக்கரும்பு, பரண்பூஜை, கிடாவெட்டுதல், மாயவர்பூஜை, படுகளம் கட்டுச்சோறுகட்டுதல் ஆகியன கோலாகலமாக நடந்தது. மேலும்,  விழாவில் பஞ்ச வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜைகளும், கூட்டுவழிபாடுகளும் வாணவேடிக்கைகளும்  நடைபெற்றன.

Tags : Annamar Temple Pongal Festival ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா