×

தேவனூர்புதூரில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

உடுமலை,செப்.15:  திருப்பூர் மாவட்டத்தின் கடைகோடி கிராமமாக  உள்ளது தேவனூர்புதூர். உடுமலை-ஆனைமலை செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள இப்பகுதிக்கு பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை பகுதிகளில் உள்ள எல்லையோர கிராம மக்கள் பேருந்து ஏறுவதற்காக வந்து செல்வது வழக்கம். பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பழனி செல்வதற்காக இவ்வழித்தடத்தையே அதிகம் உபயோகித்து வருகின்றனர்.
இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீர் ஓடையில் இருந்து கழிவுநீர் நிரம்பி சாலையில் வடிந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தனர். இந்நிலையில் சாலை விரிவாக்கம் காரணமாக தேவனூர்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீர் ஓடைகளின் மேல் பாலம் கட்டும் பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக துவங்கியது. ஆனால் பணிகள் வேகம் பெறாமல் துவங்கிய வேகத்திலேயே நின்று போனது. இதன் காரணமாக இங்கு வந்து திரும்பி செல்லக்கூடிய பேருந்துகள் ஒரு கி.மீ தொலைவிற்கு முன்னதாக ஆண்டியூரிலேயே திரும்பி செல்கிறது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் கூட்டம் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் கடைகளை பூட்டு போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தேவனூர்புதூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : bridge ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...