×

சாலையோர அபாயகர மரங்களை அகற்ற திமுக கோரிக்கை

மஞ்சூர், செப்.15: சாலையோரங்களில் அபாயகர நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜூ மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மஞ்சூரில் இருந்து ஊட்டி, குன்னூர், கோரகுந்தா, அப்பர்பவானி மற்றும் கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் எமரால்டு, அவலாஞ்சி பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பல ஆண்டுகள் வயதாகியும், பட்டுப்போயும் காணப்படுகிறது. இதனால் காற்று, மழை உள்ளிட்ட சமயங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுகின்றன.

கடந்த மாதம் பெய்த கனமழையின்போது குந்தாபாலம், கிண்ணக்கொரை, கோரகுந்தா பகுதிகளில் அதிகளவில் மரங்கள் விழுந்து வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள், அரசு தனியார் அலுவலக ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப் பட்டனர். எனவே மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சாலையோரங்களில் விழும் நிலையில் அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து ஆய்வு செய்து வெட்டி மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : DMK ,removal ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...