×

அமைச்சர் வருகையால் அவசரகதியில் சுகாதார நிலையம் திறப்பு

பந்தலூர், செப்.15: நெலாக்கோட்டை முதிரக்கொல்லி பகுதியில் கட்டிட பணி நிறைவுபெறாமல் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாற்றியுள்ளனர். பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முதிரக்கொல்லி, பெரும்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க பொதுமக்கள் சுகாதாரதுறை மற்றும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்பேரில் முதிரக்கொல்லி பகுதியில் சுகாதார துறை சார்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

இந்த சுகாதார நிலையத்திற்கு தண்ணீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொலி
காட்சி மூலம் திறந்து வைத்தார். அதில் முதிரக்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பணிகள் முழுமை பெறாமல் அவசரகதியில் திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை நிறுத்த வேண்டும், பணிகள் முழுமைபெற்ற பின் திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சப்பவம் அறிந்து முதிரக்கொல்லி பகுதிக்கு கூடலூர் எம்எல்ஏ., திராவிடமணி சென்று பேச்சுவார்தை நடத்தி பொதுமக்களை சமாதனம் செய்து, ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் முழுமை பெற்ற பின் திறக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதார துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதன்பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Health Minister ,emergency room ,
× RELATED கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து கோயம்பேடுனால ஒரே பேஜாரு சாரே...