×

காணாமல் போன வெண்கலச் சிலையை கண்டுபிடித்து தர வேண்டுகோள்

சூலூர், செப். 15:சூலூர் அருகே 11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வெண்கலச் சிலையைக் கண்டுபிடித்துத் தர வேண்டி சிலை பாதுகாப்பு துறை அதிகாரி பொன்.மாணிக்கவேலுவுக்கு கோயில் நிர்வாகத்தினர் மனு அனுப்பியுள்ளார்.
 சூலூரை அடுத்த நீலாம்பூரில் உள்ள ஜீவாநகர் பகுதியில் பழமையான மாயம் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் இருந்த மாயம் பெருமாள் வெண்கல சிலை கடந்த 2008ம் ஆண்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோயிலின் தலைவர் ஆறுமுகம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட வெண்கல சிலை குறித்து  தகவல் தெரியவில்லை. அதேபோல் கடந்த 2010ம் ஆண்டு கோயிலில் இருந்த மிக நுட்பான கலைநயத்துடன் இருந்த மேலும் 13 கற்சிலைகள் காணாமல் போயுள்ளது. இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் புகாரைப் பெற மறுப்பதாகவும் மேலும் தலைவர் ஆறுமுகம் மீதே சிலைகளைத் திருடியதாக வழக்கு பதிவு செய்வோம் என போலிசார் மிரட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொள்ளைபோன மாயம் பெருமாள் வெண்கலச் சிலை மற்றும் கற்சிலைகளை கண்டுபிடித்துத் தரக் கோரி சிலை பாதுபாப்புத்துறை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் மனு அனுப்பியுள்ளார்.

ஆறுமுகம் புகார் அனுப்பிய தகவலறிந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் அவரை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிலைகளைக் கண்டு பிடிப்பதுடன் தன்னை தாக்கியவர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளார்.

Tags :
× RELATED சென்னை அருகே திருமுல்லைவாயலில் உள்ள...