×

திமுக இளைஞர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை, செப். 15: கோவையில் திமுக இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை திமுக எம்எல்ஏ கார்த்திக் துவக்கிவைத்தார். திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு நேற்று நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளங்கோ தலைமை தாங்கினார். இதேபோல், புலியகுளம் பெரியார் சிலை  அருகே நடந்த முகாமிற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமை தாங்கினார். இவ்விரு முகாம்களையும், கோவை மாநகர்  மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏ.வுமான கார்த்திக் துவக்கிவைத்தார்.

அவர் பேசுகையில், ‘’இந்த முகாமில், பட்டதாரி இளைர்கள் ஆர்வமுடன் பங்கேற்று,  தங்களை திமுகவில் உறுப்பினராக சேர்த்துள்ளனர். இம்முகாம் வாயிலாக பல ஆயிரம் இளைஞர்கள்,  திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இப்பணி, கோவை மாநகர் முழுவதும் தீவிரமாக நடைபெறும். கோவையில் திமுக இளைஞர் அணியின் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்’’ என்றார். இதேபோல், ஆவாரம்பாளையம் பேருந்து நிறுத்தம், கணபதி பேருந்து நிறுத்தம், வடவள்ளி பேருந்து நிறுத்தம், உக்கடம் பேருந்து நிலையம்  உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

முகாமில், திமுக நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, நந்தகுமார், குப்புசாமி, வீரகோபால்,  மு.மா.ச.முருகன், மகுடபதி, தீபா, ராஜராஜேஸ்வரி, மு.ரா.செல்வராஜ், கோவை லோகு, கோவிந்தராஜ்,   வடவள்ளி சண்முகசுந்தரம், சேதுராமன், மார்க்கெட் மனோகரன், திருமலைராஜா, செந்தமிழ் செல்வன், பிரபு,  கார்த்திகேயன், கோவை  ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

சூலூர்:சூலூரில் திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.  சூலூர் பேருந்து நிலையம் எதிரில் நடந்த நிகழ்ச்சியை கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து முகாமை துவக்கி வைத்தார். இதில் சூலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், சுல்தான்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் மகாலிங்கம் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி தலைவர் நாகராஜ், சூலூர் நகர செயலாளர் ஜெகநாதன், மன்னவன் இருகூர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலூர் இளைஞரணி பிரபு மற்றும் தொழிழ்நுட்ப அணி மேகநாதன் ஆகியோ செய்திருந்தனர்.

Tags : DMK Youth Team New Membership Admission Camp ,
× RELATED இருசக்கர வாகன நம்பரை மறைப்பதால்...