×

பவானியில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

பவானி, செப். 15:  பவானி நகராட்சி பகுதியில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் நேற்று அகற்றப்பட்டன.   பவானி நகராட்சி கட்டமைப்பு அலுவலர் சீனிவாசன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் விதிகளை மீறி நகரப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அந்தியூர் மேட்டூர் பிரிவு உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள், கடை விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்து பிளக்ஸ் போர்டுகளும் அகற்றப்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

 இதில் ஒரு சில பகுதிகளில் திருமண விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றுவதற்கு அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் பிளக்ஸ் போர்டுகளை அகற்றினர்.

Tags : Removal ,Bavaria ,
× RELATED விதிமுறைகளை மீறும் இறைச்சி கடைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?