×

மூணாறில் இருந்து கொழுக்குமலை செல்ல 12 கிலோ மீட்டருக்கு ரூ.2,000 கட்டணம்?  ஜீப் டிரைவர்கள் வசூல் வேட்டை  சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

மூணாறு, செப்.11: மூணாறில் இருந்து கொழுக்குமலை செல்லும் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுலா பயணிகளிடம் ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மூணாறில் மேற்கு தொடர்ச்சிமலையின் ஓர் அங்கமாக கொழுக்குமலை அமைந்துள்ளது. தமிழக கேரளா எல்லையில் இந்த எழில்மிகு இடம் உள்ளது. இங்கு ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளன. இந்த இடங்களை பார்வையிட சுற்றுலா தினந்தோறும் வந்தவண்ணம் உள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,100 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இங்கு விளையும் தேயிலை உலக நாடுகளில் உயரமான இடத்தில் விளையும் தேயிலை என்ற சிறப்பை பெற்றுள்ளது. மூணாறில் இருந்து கொழுகுமலை செல்லும் பாதைகள் ஆபத்தான வளைவுகள் பல உள்ளதால் இங்கு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை. இதனால் ஜீப் போன்ற வாகனங்கள் மூலம் கொழுக்குமலை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சில வாகன ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகளிடம் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளனர். மூணாறில் இருந்து கொழுக்குமலைக்கு 12 கிமீ தூரம் செல்ல வாகன வாடகையாக ரூ.2000 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அது மட்டுமின்றி சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகனங்கள் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் கொழுக்குமலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வது குறித்து புதிய நடைமுறையை அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகனங்களை மூணாறு வாகன கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வர வேண்டும். அங்கு வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு போக்குவரத்து துறை அதிகாரிகளால் சான்று அளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே கொழுகுமலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்கப்படும். சுற்றுலா பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்யப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நடைமுறை 2 தினங்களுக்குள் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Kolukumalai ,Munnar ,ட்டை ,Jeep Drivers Collection Hunting ,
× RELATED மூணாறு அருகே துதிக்கையில் காயத்துடன் சுற்றித் திரியும் குட்டி யானை