×

கேரளாவிற்கு கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கம்பம் செப்.11: கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் 500 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் புட் செல் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் புட்செல் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் புட்செல் போலீசார் கம்பம்மெட்டு அடிவார பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கேரள பதிவெண் கொண்ட காரில் கம்பம் சுப்பிரமணிய கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ராஜா(37) என்பவர் 500 கிலோ ரேஷன் அரிசியை கம்பம்மெட்டு வழியாக கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. உடனடியாக ராஜாவை கைது செய்து அவரிடமிருந்து 500 கிலோ ரேஷன் அரிசியையும் காரையும் பறிமுதல் செய்தனர். ராஜா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Kerala ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...