×

புத்தாக்க பயிற்சி முகாம்

கம்பம் செப்.11: கம்பம் நாகமணி அம்மாள் பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தாளாளர் காந்த வாசன் தலைமை ஏற்றார். பள்ளி முதல்வர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். இணை தாளாளர் சுகன்யா காந்தவாசன் குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். யோகா ராஜேந்திரன் வரவேற்பு நிகழ்த்தினார். தமிழ்நாடு யோகா சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் யோகி ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விடாமுயற்சி பற்றி எடுத்துரைத்தார். தினமும் யோகா, பிராணயாமம், தியானம் போன்றவை செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவி ராம் செயல்முறை விளக்கம் அளித்தார். உதவி முதல்வர் சரவணன் நன்றி தெரிவித்தார்.

Tags : Training Camp ,
× RELATED பெரம்பலூரில் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி முகாம்