×

சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

சேலம், செப்.11: சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் திமுக கட்சி அலுவலகம் கலைஞர் மாளிகை வீரபாண்டியார் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மாநில துணை செயலாளர் வக்கீல் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தந்தை பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் திமுக இயக்கம் ேதாற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா வரும் 15ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. இதில் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Tags : Salem East District DM Youth Advisory Meeting ,
× RELATED வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு