×

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 703.3 மி.மீ மழை பதிவு

நாமக்கல், செப்.11:  நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 703.3 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதனால் விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி தொடக்கத்திலேயே கோடை வெயில் சுட்டெரித்தது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போயின. பயிர்கள் மட்டுமின்றி தென்னை, பனை மரங்களும் காய்ந்து கருகின. இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதமாக நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், குடிநீர் பிரச்னையும் பெருமளவு குறைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகி உள்ள மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): குமாரபாளையம்-32, மங்களபுரம்-91, மோகனூர்-25, நாமக்கல்-108.5, பரமத்திவேலூர்-33.6, புதுச்சத்திரம்-48.5, சேந்தமங்கலம்-135.6, திருச்செங்கோடு-96.6, ராசிபுரம்-159.2. மொத்தம் 703.3 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழச்சியடைந்துள்ளனர்.
 

Tags : Namakkal district ,
× RELATED பாஜவுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி