×

ஊட்டச்சத்து மாத விழா கொண்டாட்டம்

சாயல்குடி, செப். 11: கடலாடியில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
செப்டம்பர் 1 முதல் 30ம் தேதி வரை நாடு முழுவதும் போஷன்மா எனும் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போஷன்மா திட்டத்தின் கீழ் ஊட்டசத்து மாத விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவணுபுவன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் இத்திட்டத்தின் கீழ் குழந்தைகள், வளர் இளம்பெண்கள், மகளிர், பொதுமக்கள், மாணவர்கள், மாணவிகள், கிராமப்புற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சத்தான உணவுகள், கீரைகள், பழங்கள், காய்கறிகள், சிறுதானியம் உள்ளிட்ட பாராம்பரிய உணவுகள், சுகாதாரமான குடிநீர் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பாராம்பரிய உணவு குறித்த கண்காட்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மைதிலி, மேற்பார்வையாளர்கள் உமா, பண்ணையரசி, திட்ட உதவியாளர் வெள்ளைப்பாண்டியன், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags : Nutrition Month Celebration ,
× RELATED கடும்பாடி கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா