×

தொண்டி அருகே அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

தொண்டி, செப். 11: தொ ண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் 400க்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இங்கு போதிய கட்டிட வசதி இல்லாமல் மாணவர்கள் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனர். கூடுதல் கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு துவகப்பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும் 400க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர். மாவட்டத்திலேயே அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளி என்ற பெயரும் உண்டு. ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கையிலும் முதலிடம் வகிக்கும் இப்பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லை. கடந்த வருடம் இங்கிருந்த ஓட்டுக் கட்டிடம் இடிக்கப்பட்டது. அனால் அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித் தரப்படவில்லை. அதிகமான மாணவர்கள் இருப்பதால் போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடியில் படித்து வருகின்றனர்.இந்த வருடம் அதிகமானோர் இந்த காரணத்திற்க்காக தனியார் பள்ளியை நாடி சென்றதாக தெரிகிறது. அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பாடுபடும்போது இது போன்ற காரணங்களையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பள்ளி திறந்து முன்று மாதங்களை கடந்தும் இது வரையிலம் எவ்வித அறிவிப்பும் வரவில்லை. பச்சிளம் குழந்தைகள் படிக்க்கும் பள்ளியில் வெயிலின் கொடுமைக்கு இவர்கள் ஆளாகி வருகின்றனர். இதை தவிர்க்க உடனடியாக புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் செய்யது யூசுப் கூறுகையில், ‘மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் கட்டிட வசதியையும் அரசு செய்து தர வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு இருந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டாமல் விட்டுவிட்டனர். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டுமே. இட நெருக்கடியில் உள்ளதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லலை. உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்’ என்றார்.

Tags : Thondi ,Government Primary School ,
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது