×

செலனம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணி

போச்சம்பள்ளி, செப்.11: போச்சம்பள்ளி அடுத்த செலனம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காவேரிப்பட்டிணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செலசனம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது விளை பொருட்களை கானகுட்டை, டேம்கால்வாய் வழியாக 12 கி.மீ தூரம் உள்ள காவேரிப்பட்டிணம் மார்கெட்டுகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் குண்டும், குழியுமாக இருந்த இந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று செலசனம்பட்டி-டேம்கால்வாய் வரை தார் சாலையை அமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன் சாலை தோண்டப்பட்டது. தொடர்ந்து, ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களாகியும், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமமடைந்துள்ளனர். இதனால், காவேரிப்பட்டிணம் செல்ல 4 கி.மீ தூரமுள்ள வேலம்பட்டிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு செலனம்பட்டி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்