×

தேன்கனிக்கோட்டையில் நாளை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தேன்கனிக்கோட்டை, செப்.11: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், தேன்கனிக்கோட்டை சப்தகிரி மஹாலில் நாளை(12ம் தேதி) காலை 10 மணியளவில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகிக்கிறார். மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, ஓசூர் நகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் திருவண்ணாமலையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வது மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்படுகிறது. எனவே, முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Executive Committee Meeting ,District DMK ,
× RELATED தேன்கனிக்கோட்டை வனத்தில் கால்...