×

ஓசூரில் தேசிய ரியல் எஸ்டேட் கவுன்சில் கிளை துவக்க விழா

ஓசூர், செப்.11:ஓசூரில் தேசிய ரியல் எஸ்டேட் கவுன்சில் கிளை துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு லீலா சங்கர் ராவ் தலைமை வகித்தார், ஜெய் பிரகாஷ்  வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர்  பிரபாகர் கலந்து கொண்டார். புது நகர் வளர்ச்சி குழும செயலாளர் யோகராஜ்,  தென்னிந்திய தலைவர் பிரேம்குமார், கர்நாடக தலைவர்  சத்தீஷ்குமார், ஈரோடு சதாசிவம், தலைவர் ராசா, கர்நாடக மாநில  ஆடிட்டர் வினய், லீயோ குரூப் வித்யாசாகர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்  வாசுதேவன், ஆடிட்டர் குத்தாலிங்கம், வழக்கறிஞர் ஆனந்த குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய  வீட்டுமனை மேம்பாட்டு சபை என்ற தன்னார்வ ஒழுங்குமுறை அமைப்பு  இந்திய அரசின் வீட்டுவசதி அமைச்சகம் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைப்பின்  கீழ் 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஓசூர் பிரிவானது மாவட்ட  அளவில் வணிகத்தின் எல்லா கோளங்களையும் குறிக்கும் ஒரு சுய ஒழுங்குமுறை  அமைப்பாகும்.

Tags : Opening Ceremony ,Hosur ,National Real Estate Council Branch ,
× RELATED திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்...