×

திருப்பூர் தென்னம்பாளையம் மாட்டுசந்தை நேரம் மாற்றம்

திருப்பூர், செப் 11: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நடைபெறும் மாட்டுசந்தை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தெற்குப்பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகள் தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், நத்தக்காடையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து காளைகள், கறவை மாடுகள், எருமை ஆகியவை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை பொள்ளாச்சி கோவை மற்றும் கேரள வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் மாற்றியமைக்கப்பட உள்ளது. இங்கு கடைகளை இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்காக காய்கறி விற்பனை செய்யப்படும் இடம் தற்காலிகமாக மாட்டுச் சந்தை நடைபெறும் இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதனால் மாட்டுச் சந்தை தொடங்கும் நேரம் மாலை 4 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே வரும் வாரம் முதல் மாட்டுச்சந்தை மாலை 4 மணிக்கு  துவங்கி 6 மணிக்கு முடியும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Thiruppuram ,
× RELATED திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில்...