×

மின்னணு கழிவு அகற்றுவதில் விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

திண்டுக்கல், செப். 11:  மின்னணு கழிவு அகற்றுவதில் மத்திய சுற்றுச்சூழல் விதிகளை மீறுபவர்கள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் தெரிவித்ததாவது: மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகம், நாட்டின் மின்னணு கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல், அகற்றல் குறித்து விதிகள் அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் அக்.1, 2014 முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்விதிகளின்படி மின்னணு கழிவு என்பது, நுகர்வோர் அல்லது மின் மற்றும் மின்னணு சாதனங்களாகும். கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர், டெலிபோன், செல்போன், டெலிவிஷன், வாசிங்க் மிஷின், ஏர் கண்டிஷனர், டியூப் லைட் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளது.  இவற்றை பயன்படுத்திய பின்பு கழிவுகளாக வெளியேற்றுதல், மின் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்தியை புதுப்பித்தல், பழுது பார்க்கும் செயலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் அடங்கும்.  மின்னணு கழிவு விதிகள் சரியான முறையில் அமலாக்கம் செய்வதை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், முதன்மை அமர்வு பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது.   

இதன்படி மின் மற்றும் மின்னணு சாதனங்கள், தயாரிப்பாளர்கள் தங்களது சாதனங்கள், வினியோகித்தர் மூலமாகவோ, சில்லறை விற்பனை மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விற்பனை செய்த பின்பு, அப்பொருட்கள் ஆயுள் காலம் முடிந்தவுடன், தயாரிப்பாளர்கள் நீடித்த பொறுப்பு என்ற அடிப்படையில் திரும்ப பெற்று மறுசுழற்சி செய்கின்றனர்.  இது அவர்களின் கடமையாகும். இவ்விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 90 நாட்களுக்கு தயாரிப்பாளர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மின் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பாளர்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தினை உடனடடியாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார். தவறும்பட்சத்தில் சுற்றுச்சழூல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

மின்னணு கருவி விதிகள் 2016ன் கீழ் மின் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வோர், சீர் அமைப்போர், பிரித்தெடுப்போர், மற்றும் மறுசூழற்சி செய்வோர், மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆண்டறிக்கையை ஜூன் 30ம் தேதிக்குள் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களை கையாளும் உற்பத்தியாளர்கள், சீர் அமைப்போர், பிரித்து எடுப்போர், மறுசூழற்சி செய்வோர், மின்னணு கழிவு விதிகள் படி,  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அங்கீகாரம் பெற விண்ணப்பத்தினை மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மின்னணு கருவிகளை அங்கீகாரமின்றி கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்