×

பொது அறிவு போட்டி பரிசளிப்பு விழா

திண்டுக்கல், செப். 11:  திண்டுக்கல் அருகே செ.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது அறிவு மன்றம், நீரின்றி அமையாது உலகு அமைப்பு இணைந்து நாளிதழ் வாசிப்பு தொடர்பான பொது அறிவுத்தேர்வு மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்டது. 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள 80 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில் மாணவர் மணிபாரதி முதலிடம் பெற்றார். இதேபோல் வகுப்பு வாரியாக முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கு தலைமையாசிரியர் மேரி ஜூலியானா தலைமை வகிக்க, நீரின்றி அமையாது உலகு அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்து பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை பொது அறிவு மன்ற ஒருங்கிணைப்பாளர் ராமு செய்திருந்தார். இதில் புரவலர்கள் விருமன், குமார், ஆசிரியர்கள் குமரேஷன், சுமதி, சர்மிளா உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை ஜோஸ்பின்மேரி நன்றி கூறினார்.

Tags :
× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்