×

குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி அதிமுக எம்எல்ஏவை மக்கள் முற்றுகை

கடத்தூர், செப்.11: புதுரெட்டியூர் பகுதியில், குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய கோரி அதிமுக எம்எல்ஏவை மக்கள் முற்றுகையிட்டனர்.  தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அடுத்த புதுரெட்டியூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுரெட்டியூர் மற்றும் பழைய புதுரெட்டியூர் ஆகிய பகுதிகளுக்கு 15 அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், குடிநீருக்காக பல கிமீ தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டி உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், தர்மபுரியில் நடந்த விழாவில் கலந்துகொள்ள அவ்வழியாக  பாப்பி ரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி கட்சியினருடன் வந்தார். இதை அறிந்த அப்பகுதி மக்கள், முற்றுகையிட்டு எங்கள் பகுதிக்கு 15 மற்றும் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய குடிநீர் வழங்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கூடுதல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க எடுப்பேன் என உறுதியளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

Tags :
× RELATED கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில்...