×

நாட்டு கோழி ருசிக்கு காரணம் என்ன?

நத்தம், செப். 11: நாட்டுக்கோழி ருசி, மணத்திற்கு காரணம் என்ன என்று கால்நடைத்துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார். திண்டுக்கல் கால்நடை பராமரிப்ப துறை முன்னாள் இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது, ‘தொழில் ரீதியாக கூண்டு முறையில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நோய்த்தடுப்பு முறைகளை தவறாமல் கையாளுகின்றனர். அதேபோல் கிராமபுறங்களிலும் நாட்டுக்கோழி வளர்ப்பில் முறையான நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இதனால் கோழிகள் இறப்பு குறைந்து பொருளாதார நஷ்டம் ஏற்படாது. நாட்டு கோழிகளை சமைப்பதால் ஏற்படும் மணமும், ருசியும் இறைச்சி உண்போரை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. இதனாலேயே நாட்டுக்கோழிகளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.       இயற்கையிலேயே நாட்டுக்கோழிக்கறியின் சதை பகுதியில் உள்ள திசுக்கள் ருசியாக இருக்குமாறு அமைந்துள்ளன. மேலும் அவை புறக்கடையில் சென்று குப்பைகளை கிளறியும், நிலக்கழிவுகளையும் பச்சைப்புல்லுடன் சேர்த்து சாப்பிடுவதால் நாட்டுக்கோழியின் கறியானது சமைக்கும் போது வாசனையை பரப்புகிறது. நாட்டு கோழிக்கறியின்  இந்த மணமும், ருசியுமே இறைச்சி உண்போரை கவர்ந்திருக்கிறது’ என்றார்.

Tags :
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு