×

திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் இல்லத்திருமண விழா

காரிமங்கலம், செப்.11: தர்மபுரி மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளரும் சி.எம்.எர்த் மூவர்ஸ் உரிமையாளருமான சி.எம்.மாரியப்பன்-வனிதா ஆகியோரின் மகள் அருண்மொழிக்கும், இருமத்தூர் ராஜேந்திரன்-சாரதா ஆகியோரின் மகன் இன்ஜினியர் வெங்கடாஜலத்திற்கும் திருமணம் இன்று காலை கொல்லாபுரியம்மன் கோவில் சுந்தரகவுண்டர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. திருமண விழாவிற்கு காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் வரவேற்கிறார்.  தர்மபுரி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைக்கிறார். பென்னாகரம் எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரன், தர்மபுரி எம்பி.டாக்டர்  செந்தில்குமார், மாவட்ட அவைத்தலைவர் ஜி.வி.மாதைய்யன், மாவட்ட துணை செயலாளர்  சூடப்பட்டி சுப்பிரமணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.  முன்னதாக நேற்று இரவு அடிலம் ஏ.சப்பாணிப்பட்டியில் மணமக்கள் ஊர்வலமும் வரவேற்பும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சி.எம்.மாரியப்பன், வனிதா மற்றும் குடும்பத்தினர்  செய்துள்ளனர்.

Tags : Deputy Organizer ,DMK Agriculture Team ,
× RELATED மழையால் சில இடங்களில் நெல்லுக்கு...