×

முதல்வர் எடப்பாடி கோவை வருகை

கோவை, செப்.11:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து அவர் சேலம் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை பெற அமெரிக்க, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 28ம் தேதி முதல் 13 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். பின்னர் நேற்று காலை சென்னை திரும்பினார்.தொடர்ந்து நேற்று மாலை விமானம் மூலம் கோவை வந்த முதல்வரை  உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் வரவேற்றனர்.தொடர்ந்து அவர் கார் மூலம் சேலம் சென்றார்.

Tags : Chief Minister ,Edappadi Coimbatore ,
× RELATED முதல்வர் எடப்பாடி திடீர் சேலம் பயணம்