×

கொசுக்களால் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

கோவை, செப்.11:  கோவை மாவட்டத்தில் கொசு உற்பத்தி அதிகரித்து வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திறந்த வெளியில் நீர் தேக்கம் இருப்பதால் கொசுக்கள் வேகமாக பெருகி வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. கொசுக்களை அழிக்க முடியாமல் சுகாதார துறை, உள்ளாட்சிகள் திணறி வருகிறது. இதுவரை வைரஸ் கொசு ஸ்டேஜ் 4 அளவை தாண்டியதால் பாதிப்பு வேகமாகி விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஏடீஸ் வகை கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி விட்டது. சுகாதார துறையினர் கூறுகையில், ‘‘கொசுக்களின் வாழ்க்கை 6 நாட்கள் முட்டை பருவத்தில் இருந்து அடுத்த 6 நாட்கள் பியூப்பா என்ற இளம் பருவத்திற்கு மாறுகிறது. பின்னர் வளர்ந்த கொசுவாக மாறி விடுகிறது. கொசுக்களை அழிக்கும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசு முட்டைகளை அழிக்க நீர் தேக்கத்தில், தொட்டிகளில் ‘அபேட்’ என்ற மருந்து ஊற்றப்படுகிறது.

இதை தொடர்ந்து டெங்கு, பன்றி காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்க பைரித்திரம் என்ற புகை மருந்து தெரு, தெருவாக தெளிக்கப்படுகிறது. இதில் எடீஸ், அனாப்ளக்ஸ் கொசுக்களை அழிக்கிறோம். அனாப்ளக்ஸ் கொசுக்கள் பகலில் கடிக்காது. இரவில் மட்டுமே கடிக்கும் தன்மை கொண்டது. இந்த கொசுக்கள் மூலமாக மலேரியா காய்ச்சல் ஏற்படும். டெங்கு, சிக்குன் குனியா பாதிப்பை எடீஸ் கொசுக்கள் ஏற்படுத்துகின்றன.  பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகே நீர் தேக்கம் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். வீடுகளில் கொசு வலை பயன்படுத்துவது பாதுகாப்பானது. புறநகரில் 1108 கிராமங்களில் பைரித்திரம், அபேட் மருந்து தெளிப்பு பணி வாரம் ஒரு முறை என சுழற்சி முறையில் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது, ’’ என்றனர்.

Tags : Mosquitoes ,
× RELATED கொலம்பியா தொழிற்சாலையில் வாரத்துக்கு...