×

இலஞ்சி பேரூராட்சி பகுதிகளில் 3000 பனைமர விதைகள் நடவுபணி

செங்கோட்டை, செப். 11: இலஞ்சி  பேரூராட்சி பகுதிகளில் 3 ஆயிரம்  பனைமர விதைகள் நடும்பணி துவங்கியது. நெல்லை கலெக்டர்  ஷில்பா பிரபாகர் சதீஷ், பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் அறிவுரையின்பேரில் இலஞ்சி  பேரூராட்சியில் நீர்மேலாண்மை இயக்கத்தின் முக்கிய கூறான தீவிர காடு  வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இலஞ்சிப் பகுதிகளில் பனைமர விதைகள் நடும்பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக இலஞ்சி பெரியகுளத்தின் கரையில் 3 ஆயிரம் பனை மர விதைகள் நடப்பட்டன.

இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த பேரூராட்சி செயல் அலுவலர் லோபா முத்திரை, பனைமர விதைகளை நட்டு இப்பணிகளைத் துவக்கிவைத்தார். இதில் இளநிலை உதவியாளர் சங்கரசுப்பிரமணியன், சுகாதார  மேற்பார்வையாளர் குளத்தூரான், வனத்துறை அலுவலர் சிவகுருநாதன், அருணாசலம், வெள்ளத்துரை பாண்டியன், ஓய்வுபெற்ற மாவட்ட வன அலுவலர் அரசப்பன், தன்னார்வலர் அருள் தேவதாஸ், தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் மேம்பாடு சங்க  மாநில துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : area ,Lunugamochi ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி தொடக்கம் நாற்று...