×

பூலாங்குளம் பள்ளிக்கு கலாம் ஓவியம் வழங்கல்

நெல்லை, செப். 11: முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் ஓவியத்தை பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ராமர் வரைந்து வழங்கினார். கீழப்பாவூர் வட்டாரத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ராமர். பல்வேறு சமூகப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வரும் இவர், முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் ஓவியத்தை வரைந்து கீழப்பாவூர் சரகம் பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு வழங்க முடிவு செய்தார். இதன்படி மிகுந்த கலைநுட்பத்துடன் தான் வரைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஓவியத்தை பள்ளிக்கு வழங்கினார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அருள்செல்வன் தலைமையில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Poolangulam School ,
× RELATED இருப்பதும் நைந்து போச்சு; எங்க போயி...