×

கலை, அறிவியல் போட்டி பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

பாவூர்சத்திரம், செப். 11:  கலை, அறிவியல் போட்டிகளில் பாவூர்சத்திரம் செயிண்ட்  அசிசி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாவூர்சத்திரம்  எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை மற்றும் அறிவியல் போட்டிகள் (எம்எஸ்பிவி  பெஸ்ட்-2019) என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் 45க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை  வெளிப்படுத்தினர்.

இதே போல் பங்கேற்ற பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த  பிளஸ் 2 மாணவிகள் கிளாரிடா ஜோஸ் கவிதை  எழுதும் போட்டியில் முதலிடமும், 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீ புவனேஸ்வரி  கையெழுத்துப் போட்டியில் முதலிடமும்,  ரஹ்மத்துள்  சப்ரின் கட்டுரைப் போட்டியில் முதலிடமும் வென்றனர். சாதனை படைத்த இவர்களையும், இதர போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ,  மாணவிகளையும் பள்ளி நிர்வாகி அந்தோனி சேவியர், பள்ளி முதல்வர்  முத்துலட்சுமி  உள்ளிட்டோர் பாராட்டினர்.

Tags : St Assisi School of Art and Science Competition ,
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு