×

திருமாநிலையூர் அமராவதி ஆற்று பாலத்தில் ரூ.1 கோடியில் பூங்காவுடன் நடைபாதை அமைக்கும் பணி அமைச்சர் பார்வையிட்டார்

கரூர், செப். 11: கரூர் அமராவதி ஆற்றில் ரூ.1 கோடி மதிப்பில் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணியினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.கரூர் திருமாநிலையூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே பழைய பாலதத்தை கரூர் வைஸ்யா வங்கி பங்களிப்புடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்காவுடன் கூடிய நடைபாதையாக அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காகவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் பழைய அமராவதி பாலத்தை சீரமைக்கப்பட்டு வருகிறது. பேவர் பிளாக் கற்கள் பதித்து, இரண்டு பகுதியிலும் பாதுகாப்புக்காக உயரிய கம்பிகள் பொருத்தப்பட உள்ளது. நடுவில் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.

சாய்வு நாற்காலிகள், மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. பூங்காவின் நுழைவு வாயில் அருகே பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட உள்ளது. இன்றும் 3 மாதத்தில் இப்பணிகள் நிறைவு செய்யப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்,திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், ஆர்டிஓ சந்தியா, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் கரூர் வைஸ்யா வங்கி பொது மேலாளர் சாய்ராஜ், பொறியாளர் ஜெய்சங்கர், தாசில்தார் அமுதா, சிவசாமி, திருவிகா, நெடுஞ்செழியன், ஜெயராஜ், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சாகர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 36...