×

கரூர் சுங்ககேட் அருகில் சாக்கடை வடிகாலில் அடைப்பால் சாலையில் செல்லும் கழிவு நீர்

கரூர், செப். 11: கரூர் சுங்ககேட் அருகே சாக்கடை வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் அனைத்தும் சுங்ககேட் சிக்னல் வரை சாலையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கருர் சுங்ககேட் அருகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பிரதான சாக்கடை வடிகால் செல்கிறது. நேற்று முன்தினம் இரவு சாக்கடை வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாக்கடை கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் சாலையில் வெள்ளம் போல வழிந்தோடியது.

சுங்ககேட் சிக்னல் பகுதி வரை சென்ற இந்த சாக்கடை கழிவு காரணமாக இந்த பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அடைப்பை நீக்கும் மினி லாரி வரவழைக்கப்பட்டு அடைப்புகள் நீக்கப்பட்டன.தெர்மாகோல் போன்றவற்றை சாக்கடை வடிகாலில் போட்டுச் சென்றதால்தான் இவ்வாறு அடைப்பு ஏற்பட்டது எனவும், அவை சரி செய்யப்பட்டு விட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் சாக்கடை வடிகாலில், டயர், தெர்மாகோல் போன்றவை போடப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் எனவும் நகராட்சி சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது.

Tags : Karur Sungkate ,
× RELATED சின்னாளபட்டியில் சிறு மழைக்கே...