×

தடை விதிக்கப்பட்ட நிலையில் கரூர் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை விறுவிறுப்பு

கரூர், செப். 11: பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் நகராட்சிக்குட்பட்ட பல கடைகளில் பிளாஸ்டிக் கப் போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஒரு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது.பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டதுமே டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் பொருட்களும் விற்பனை தடை செய்யப்பட்டு விட்டன.ஆனால் தற்போதைய நிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் பார்கள் செயல்பாடு இல்லாத காரணத்தினால் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது.

பேப்பர் கப்புகளை விட பிளாஸ்டிக் கப்புகள் விலை மிகவும் குறைவு என்பதால் லைட்ஹவுஸ் கார்னர் போன்ற பகுதிகளில் உள்ள சில கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.குறைந்த விலையில் கிடைப்பதால் குடிமகன்களும் இதனை வாங்கி பயன்படுத்தி விட்டு, காட்டுப்பகுதியில் தூக்கி எறிந்து விட்டு செல்வதால் திரும்பவும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரித்த நிலையில் உள்ளன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறைமுகமாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து பார்வையிட்டு அதனை முற்றிலும் தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,Karur ,
× RELATED வாட்டி வதைக்கும்...