ஆட்டோவில் கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை கோட்டை காவல் நிலைய போலீசார் ேநற்று முன்தினம் இரவு ராஜாஜி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின்னல் வேகத்தில் ஆட்டோ ஒன்று வந்தது. அதை பார்த்த போலீசார் ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் இவருவரையும் பிடித்து ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து இரண்டு வாலிபர்களையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோட்டை பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான ராஜேஷ் (26), பார்த்திபன் (28) என தெரியவந்தது. இருவரும் அன்னை சத்யா நகரில் கஞ்சா வாங்கி வந்து, கோட்டை பகுதியில் விற்பனை ெசய்து வந்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது