×

நாசரேத்தில் மனித நேய மேம்பாட்டு தினவிழா

நாசரேத், செப்.11: நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மனிதநேய மேம்பாட்டு தினவிழா நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி தலைமை வகித்தார். ஆசிரியை ஸ்வீட்லின் ஜெபம் செய்தார். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் அமலவளன் வாழ்த்தி பேசினார்.

திருமறையூரில் உள்ள காது கேளாதோர் பள்ளி, மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியிலுள்ள 20 மாணவிகளுக்கு புத்தாடைகளும், 15 ஏழை பெண்களுக்கு இலவச சேலையும், உதவி தொகையும் வழங்கப்பட்டன. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி அலுவலர் சுந்தரி நன்றி கூறினார்.

Tags : Humanitarian Development Day ,Nazareth ,
× RELATED குண்டும் குழியுமாக மாறிய நாசரேத் - இடையன்விளை சாலை: வாகன ஓட்டிகள் திணறல்